கர்நாடகாவில் செமிகண்டக்டர் சிப் ஆலை அமைக்க 400 மில்லியன் டாலர் முதலீடு - எச் சி எல் அறிவிப்பு

November 30, 2023

எச் சி எல் நிறுவனம் செமி கண்டக்டர் சிப் பரிசோதனை மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை கர்நாடகாவில் அமைக்க உள்ளது. இதற்காக 400 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உள்ளது. எச் சி எல் குழுமம், கர்நாடக அரசுடன் இணைந்து செமி கண்டக்டர் ஆலை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், மைசூரு பகுதியில் ஹெச் சி எல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிலத்தில் இந்த ஆலை அமைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில், […]

எச் சி எல் நிறுவனம் செமி கண்டக்டர் சிப் பரிசோதனை மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை கர்நாடகாவில் அமைக்க உள்ளது. இதற்காக 400 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உள்ளது.

எச் சி எல் குழுமம், கர்நாடக அரசுடன் இணைந்து செமி கண்டக்டர் ஆலை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், மைசூரு பகுதியில் ஹெச் சி எல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிலத்தில் இந்த ஆலை அமைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில், ஹெச் சி எல் குழுமம் மைக்ரான் நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெறும். ஏற்கனவே, டாடா குழுமம், முருகப்பா குழுமம் மற்றும் கேனஸ் டெக்னாலஜி ஆகியவை இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu