ஹெச் சி எல் டெக் நிகர லாபம் 11% உயர்வு - வருவாய் 18% உயர்வு

April 21, 2023

இந்தியாவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச் சி எல் டெக் நிறுவனம், தனது நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 11% உயர்ந்து, 3983 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் இயக்கம் மூலம் கிடைக்கும் வருவாய் 18% உயர்ந்து, 26606 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வருடாந்திர அடிப்படையில் லாபம் பதிவானாலும், காலாண்டு அடிப்படையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் […]

இந்தியாவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச் சி எல் டெக் நிறுவனம், தனது நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 11% உயர்ந்து, 3983 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் இயக்கம் மூலம் கிடைக்கும் வருவாய் 18% உயர்ந்து, 26606 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வருடாந்திர அடிப்படையில் லாபம் பதிவானாலும், காலாண்டு அடிப்படையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் 4096 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நிறுவனத்தின் வருவாயை பொறுத்தவரை, மென்பொருள் வர்த்தகம் மூலம் கிடைக்கும் வருவாய் 8.2% மற்றும் இதர வர்த்தகம் மூலம் கிடைக்கும் வருவாய் 17% உயர்வை பதிவு செய்துள்ளன.ஹெச் சி எல் டெக் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் 2024 ஆம் நிதி ஆண்டுக்கு, பங்கு ஒன்றுக்கு 18 ரூபாய் என்ற அளவில் இடைக்கால டிவிடெண்ட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu