பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எச் சி எல் டெக் நிறுவனம், தனது இரண்டாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, எச் சி எல் டெக் நிறுவனத்தின் நிகர லாபம் 9.9% உயர்ந்து, 3833 கோடி ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 8% உயர்ந்து, 26672 கோடியாக உயர்ந்துள்ளது. பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று வெளியிடப்பட்டுள்ள காலாண்டு முடிவுகள், பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இன்றைய வர்த்தகத்தில், ஹெச் சி எல் டெக் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 2% உயர்வை பதிவு செய்து வருகின்றன.