ஹெச் சி எல் டெக் காலாண்டு முடிவுகள் வெளியீடு

July 12, 2024

ஹெச் சி எல் டெக் நிறுவனம் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 20.46% உயர்ந்து 4257 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 6.7% உயர்ந்து 28057 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, 2 ரூபாய் மதிப்புள்ள ஹெச் சி எல் டெக் பொதுப்பங்கு ஒன்றுக்கு 12 ரூபாய் இடைக்கால டிவிடெண்ட் வழங்க நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. வரும் ஜூலை 23ஆம் தேதி […]

ஹெச் சி எல் டெக் நிறுவனம் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 20.46% உயர்ந்து 4257 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 6.7% உயர்ந்து 28057 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, 2 ரூபாய் மதிப்புள்ள ஹெச் சி எல் டெக் பொதுப்பங்கு ஒன்றுக்கு 12 ரூபாய் இடைக்கால டிவிடெண்ட் வழங்க நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. வரும் ஜூலை 23ஆம் தேதி டிவிடெண்ட் தொகை உறுதி செய்யப்பட்டு, ஆகஸ்ட் 1 முதல் வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று ஹெச் சி எல் டெக் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை வெளியாவதை ஒட்டி, காலை நேர வர்த்தகத்தில் 3.2% அளவுக்கு ஹெச் சி எல் டெக் பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகின. நேற்று டிசிஎஸ் நிறுவனம் காலாண்டு அறிக்கையை வெளியிட்டதை அடுத்து, இன்று எச் சி எல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐடி நிறுவன பங்குகள் இன்றைய பங்குச் சந்தையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu