பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி உடன் இணைந்து புதிய கிரெடிட் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இரு நிறுவனங்களும் இணைந்து அறிமுகம் செய்துள்ள கிரெடிட் கார்டில், பல்வேறு புதிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு ஸ்விக்கி ஆர்டருக்கும் 10% கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, ஸ்விக்கி தளத்தில் மளிகை பொருள் வாங்கினாலும், வெளியில் சென்று ‘டைன் அவுட்’ முறையில் ஸ்விக்கி பயன்படுத்தினாலும் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமேசான், ஃப்ளிப்கார்ட், மிந்த்ரா, ஓலா, உபர், புக் மை ஷோ போன்ற இணைய வர்த்தக தளங்களில், இந்த கிரெடிட் கார்டு பயன்படுத்தி செலுத்தப்படும் கட்டணங்களுக்கு, 5% கேஷ் பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களுக்குள், தகுதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த கிரெடிட் கார்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் கார்டு நிறுவனம் இந்த கார்டை வழங்குகிறது.














