ஹெச்டிஎஃப்சி வங்கியின் உயர் பதவிகளில், புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. உயர் அதிகாரிகளின் நியமனத்திற்கு மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கி உள்ளதாக இன்று ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது. வங்கியின் இணை நிர்வாக இயக்குனராக கைசத் பருச்சா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், செயற்குழு நிர்வாகியாக பாவேஷ் சாவேரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பதவி வகிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைசத் பருச்சா மற்றும் பாவேஷ் சாவேரி ஆகியோர் ஹெச்டிஎஃப்சி வங்கியில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பருச்சா, ஹெச்டிஎஃப்சி க்கு முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார். அதே வேளையில், சாவேரி, ஓமன் இன்டர்நேஷனல் பேங்க் மற்றும் பார்க்லேஸ் பேங்க் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.