இந்திய அளவில் யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. ஒவ்வொரு சிறிய கொடுக்கல் வாங்கலும் யுபிஐ மூலம் நடத்தப்படுகிறது. இந்த சூழலில், 100 ரூபாய்க்கு குறைவான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எஸ்எம்எஸ் சேவை நிறுத்தப்படுவதாக ஹெச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது. வரும் ஜூன் 25ஆம் தேதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
பொதுவாக, ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும் போதும் அதைப் பற்றிய குறுஞ்செய்தி வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும். வரும் ஜூன் 25 முதல், 100 ரூபாய்க்கு அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்திய அளவில் யுபிஐ பரிவர்த்தனைகள் எண்ணிக்கை 100 பில்லியன் இலக்கை தாண்டி, 118 பில்லியனை தொடும்நிலையில் உள்ளது. மேலும், சராசரியாக ஒரு யுபிஐ பரிவர்த்தனையில் பரிமாற்றம் செய்யப்படும் தொகையின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. இவற்றின் காரணமாக குறுஞ்செய்தி சேவை நிறுத்தப்படுவதாக ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.














