ஹெச்டிஎஃப்சி வங்கி, கடன் பத்திர வெளியீட்டின் மூலம் 7425 கோடி நிதியை திரட்டி உள்ளது. அண்மையில், பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட ஒழுங்காற்று அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கி, ரூ.1 லட்சம் மதிப்புடைய உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டது. மொத்தம் 742500 எண்ணிக்கையில் கடன் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன. எனவே, 7425 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. நீண்ட கால அடிப்படையில், மீட்கக் கூடிய மற்றும் பங்குகளாக மாற்ற முடியாத, பாதுகாப்பற்ற கடன் பத்திரங்களாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக, குறைந்த விலை வீடுகள் அமைப்பது மற்றும் உள்கட்டமைப்புகளை மேற்கொள்வதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என எச்டிஎப்சி வங்கி சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.