எச்டிஎப்சி ஹெச்டிஎஃப்சி வங்கி இணைப்பால், நிஃப்டி எலைட் பட்டியலில் இடம்பெறும் மைண்ட் ட்ரீ

June 27, 2023

ஹெச்டிஎஃப்சி நிறுவனமும் ஹெச்டிஎஃப்சி வங்கியும் இனிமேல் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு, ஒற்றை நிறுவனமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று, எச்டிஎப்சி சேர்மன் தீபக் பாரேக், இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது இன்றைய பங்குச் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், இரு நிறுவனங்களும் ஒற்றை நிறுவனமாக இணைவதால், பங்குச்சந்தை எலைட் பட்டியலில் இடம்பெற மற்றொரு நிறுவனத்திற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், அந்த வாய்ப்பு எல்.டி.ஐ மைண்ட் ட்ரீ நிறுவனத்திற்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் […]

ஹெச்டிஎஃப்சி நிறுவனமும் ஹெச்டிஎஃப்சி வங்கியும் இனிமேல் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு, ஒற்றை நிறுவனமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று, எச்டிஎப்சி சேர்மன் தீபக் பாரேக், இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது இன்றைய பங்குச் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், இரு நிறுவனங்களும் ஒற்றை நிறுவனமாக இணைவதால், பங்குச்சந்தை எலைட் பட்டியலில் இடம்பெற மற்றொரு நிறுவனத்திற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், அந்த வாய்ப்பு எல்.டி.ஐ மைண்ட் ட்ரீ நிறுவனத்திற்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் ஆறாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக எல்டிஐ மைண்ட் ட்ரீ உள்ளது. வரும் ஜூலை 13ஆம் தேதி முதல், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகிய இரு நிறுவனங்கள் ஒற்றை நிறுவனமாக பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன. எனவே, அன்று முதல் எல்டிஐ மைண்ட் ட்ரீ, நிஃப்டி எலைட் 50 பட்டியலில் இணையும் என்று கருதப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி வெளியான பிறகு, இன்றைய பங்குச் சந்தையில், எல்.டி.ஐ மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் பங்குகள் 3.5% வரை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu