எச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், வருடாந்திர அடிப்படையில் 15% லாப உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் 315 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்திற்கு, பிரீமியம் தொகை மூலம் கிடைத்த வருவாய் 19% உயர்ந்து, 14379 கோடியாக பதிவாகியுள்ளது.
எச்டிஎப்சி ஆயுள் காப்பீடு கிளை நிறுவனத்தின் கடன் அளிப்பு விகிதம் 209% உயர்ந்துள்ளது. மேலும், நடப்பு நிதி ஆண்டில், டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், தனி நபரின் வருடாந்திர ப்ரீமியம் தொகை 6874 கோடியாக பதிவாகியுள்ளது. இது கடந்த வருடத்தில் 5577 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே காலகட்டத்தில் மொத்தமாக வசூலிக்கப்பட்ட பிரீமியம் தொகை 37907 கோடியாக பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டில் 31542 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.