நாளை முதல் இந்தியாவின் எச்டிஎப்சி வங்கி மற்றும் வீட்டுக் கடன் வழங்கும் ஹெச்டிஎஃப்சி நிறுவனம் ஆகியவை இணைந்து ஒற்றை நிறுவனமாக செயல்பட உள்ளன. இந்த இணைப்பு இந்திய பங்குச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன், ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு உலக அரங்கில் புதிய இடம்பெற்று தந்துள்ளது. அதாவது, உலகின் மதிப்புமிக்க வங்கிகளின் பட்டியலில் எச்டிஎப்சி வங்கி முதல் முறையாக இடம்பெறவுள்ளது.
ப்ளூம்பர்க் வெளியிட்டுள்ள மதிப்புமிக்க வங்கிகள் பட்டியலில் எச்டிஎப்சி வங்கி நான்காம் இடம் பெறுகிறது. இந்த வங்கியின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 120 மில்லியன் ஆக சொல்லப்பட்டுள்ளது. இது ஜெர்மனியின் மொத்த மக்கள் தொகையை விட கூடுதலாகும். அத்துடன், வங்கி கிளைகளின் எண்ணிக்கை 8300 க்கும் அதிகமாக கூறப்பட்டுள்ளது. மேலும், வங்கியில் பணி செய்யும் ஊழியர் எண்ணிக்கை 1.77 லட்சத்திற்கும் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, ஹெச் எஸ் பி சி, எஸ் பி ஐ, ஐ சி ஐ சி ஐ ஆகிய வங்கிகளை பின்னுக்கு தள்ளி. ஹச் டி எஃப் சி வங்கி முன்னேறி உள்ளது. ப்ளூம்பர்க் வெளியிட்டுள்ள பட்டியலில் எச்டிஎப்சிக்கு முன்பாக ஜே பி மோர்கன், சீனாவின் தொழில் மற்றும் வர்த்தக வங்கி, பேங்க் ஆப் அமெரிக்கா ஆகியவை உள்ளன.














