திருநங்கைகளுக்கு சுகாதார காப்பீட்டு அட்டை - விரைவில் மத்திய அரசு அறிமுகம்

August 25, 2022

திருநங்கைகளுக்கு சுகாதார காப்பீட்டு அட்டையை விரைவில் மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இந்தியாவில் திருநங்கைகளை சமூகத்தின் முக்கிய அங்கமாக கொண்டு வருவதற்காக மத்திய அமைச்சகம் சார்பாக, திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, திருநங்கைகளின் உரிமையை பாதுகாக்கும் வகையில் தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் திருநங்கைகளுக்கு சுகாதார காப்பீட்டுத் திட்டம் வழங்க மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும், தேசிய சுகாதார ஆணையமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு, […]

திருநங்கைகளுக்கு சுகாதார காப்பீட்டு அட்டையை விரைவில் மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது.

இந்தியாவில் திருநங்கைகளை சமூகத்தின் முக்கிய அங்கமாக கொண்டு வருவதற்காக மத்திய அமைச்சகம் சார்பாக, திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, திருநங்கைகளின் உரிமையை பாதுகாக்கும் வகையில் தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் திருநங்கைகளுக்கு சுகாதார காப்பீட்டுத் திட்டம் வழங்க மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும், தேசிய சுகாதார ஆணையமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு, பயனாளி திருநங்கையாகவும், இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட திருநங்கை சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும். இந்த சுகாதாரக் காப்பீடு அட்டை ஆயுஷ்மான் பாரத் டிஜி என்று அழைக்கப்படும். இதன் மூலம், ஒவ்வொரு திருநங்கைக்கும் மருத்துவக் காப்பீடு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை நிதியளிக்கப்படும். இதற்கு வருமான உச்சவரம்பு மற்றும் கட்டணம் கிடையாது.

மேலும், தற்போதுள்ள தகவலின்படி நாட்டில் 10,639 பேருக்கு திருநங்கைகள் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 8,080 பேருக்கு திருநங்கைகள் பிரத்யேக அடையாள எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் சான்றிதழ் கேட்டு 2314 விண்ணப்பங்கள் வந்துள்ளன என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu