ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் 2 - ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370- வது சட்டப்பிரிவை ரத்து செய்து இரண்டு மாநிலமாக பிரித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து பலவேறு தரப்பினர் தாக்கல் செய்த மனு 3 வருடங்களாக நிலுவையில் உள்ள நிலையில் இன்று உச்சநீதிமன்றமத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பான விவரங்களை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் அறிவித்தது. அப்போது ஜூலை 27-ந்தேதிக்குள் அரசியலமைப்பு பிரிவு 370 ரத்து தொடர்பான ஆவணங்கள், எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 2-ந்தேதியில் இருந்து விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.
திங்கள் மற்றும் வெள்ளி தவிர மற்ற நாட்களில் இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் தலைமையில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.














