ஐரோப்பாவில் வெப்ப அலை தாக்கம் அதிகரிப்பு

July 18, 2023

ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்த வெப்ப அலை, ரோம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத முறையில் ஐரோப்பாவில் வெப்ப அலை வாட்டி வதைத்து வருகிறது. பொதுமக்கள் அதிகமாக தண்ணீர் அருந்தும் படியும், பகல் நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்கும் படியும், கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இத்தாலி அருகில் உள்ள சிசிலி, சார்டினியா போன்ற தீவுகளில் 118 டிகிரி பாரன்ஹீட் அல்லது 48 டிகிரி செல்சியஸ் வரையில் […]

ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்த வெப்ப அலை, ரோம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாறு காணாத முறையில் ஐரோப்பாவில் வெப்ப அலை வாட்டி வதைத்து வருகிறது. பொதுமக்கள் அதிகமாக தண்ணீர் அருந்தும் படியும், பகல் நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்கும் படியும், கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இத்தாலி அருகில் உள்ள சிசிலி, சார்டினியா போன்ற தீவுகளில் 118 டிகிரி பாரன்ஹீட் அல்லது 48 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அத்துடன், Loutraki பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. அங்கிருந்த 1200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். வெப்ப அலை காரணமாக இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற நிகழ்வுகள் மனித குலத்துக்கே ஆபத்தாக மாறும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu