கேரளாவில் வெப்ப அலை அதிகமாக தாக்கி வருவதால் ஒரே நாளில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகம் மற்றும் கேரளாவில் ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கி வருகிறது. கேரளா மாநிலத்தில் பாலக்காடு உள்ளிட்ட பல இடங்களில் 104 டிகிரிக்கு மேல் வெப்பம் தாக்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்களிக்க வந்த வாக்காளர்களில் 10 பேர் வெப்ப அலை தாக்கியதில் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக பகல் நேரத்தில் தேவை இல்லாமல் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என கேரள மாநில சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதில் பாலக்காடு மாநிலத்தில் மட்டும் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.














