வட இந்தியாவின் அநேக பகுதிகளில், கோடை வெயில் அதிகரித்து காணப்படுகிறது. மேலும், அங்கு ஏற்பட்டுள்ள வெப்ப அலை காரணமாக, கடந்த 3 நாட்களில் கிட்டத்தட்ட 98 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, பிஹார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. பிகாரில் 44 பேரும், உத்திர பிரதேச மாநிலத்தில் 54 பேரும், பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலானோர், வெப்பக் காய்ச்சல், மூச்சுத் திணறல் உட்பட பல்வேறு உடல் உபாதைகளை அடைந்ததாகவும், இறுதியில் உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்தோரில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் எனவும் செல்லப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையத்தின் தரவுகள் படி, வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இயல்பை விட அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. குறிப்பாக, பிஹார் மாநிலத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட இடங்களில் கடுமையான வெப்ப அலை உணரப்பட்டுள்ளது.