தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் குமரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.மேலும் இதே போல கடலோரப் பகுதி மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகின்றது. இந்த வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியால் மேலும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றும் நாளையும் சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.














