டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சென்னை வானிலை ஆய்வு மையம் டெல்டா மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேபோல், நாகை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. புதிய தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.