‘மேன்டூஸ்’ புயல் வலுவடைவதால் டிச.9-ல் அதிகனமழை எச்சரிக்கை

December 7, 2022

வங்கக்கடலில் உருவாகும் ‘மேன்டூஸ்’ புயல் வலுவடைவதால் டிச.9-ல் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை புயலாக வலுவடையக்கூடும். இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 9-ம் தேதி சென்னை, திருவள்ளூர், […]

வங்கக்கடலில் உருவாகும் ‘மேன்டூஸ்’ புயல் வலுவடைவதால் டிச.9-ல் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை புயலாக வலுவடையக்கூடும். இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

9-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும், வங்கக்கடலில் உருவாகும் ‘மேன்டூஸ்’ புயல் வலுவடைவதால் டிச.9-ல் அதிகனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu