ஸ்பெயினின் ஜராகோசா மாகாணத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஸ்பெயினின் ஜராகோசா மாகாணத்தில் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் அங்குள்ள நகருக்குள் பல கார்கள் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டன. காரை ஓட்டிவந்தவர்கள் அதில் இருந்து வெளியேறி கார் மேலே அமர்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் காருடன் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டனர். சிலர் மரங்களை பிடித்து தப்பினர். சிலரை பொதுமக்கள் மீட்டனர். கார்கள் மீது பொதுமக்கள் அமர்ந்தபடி வெள்ளத்தில் இழுத்து செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.