சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருவதால், ஒரே இரவில் 46,400 பேர் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
செங்டு, குவாங்யுவான் மற்றும் கார்சே திபெத்திய நகரம் உள்ளிட்ட ஏழு நகரங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மியான்யாங், யான், குவாங்யுவான், டியாங், அபா மற்றும் கார்ஸ் ஆகிய நகரங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்தாக தகவல் வெளியாகி உள்ளது. செங்டுவில் உள்ள ஜில்லிங் ஸ்னோ மவுண்டன் ஸ்கை ரிசார்ட்டில் 165.1 மில்லிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. அதன் விளைவாக மத்திய வானிலை ஆய்வு மையம் அப்பகுதிக்கு நீல நிற எச்சரிக்கை விடுத்தது. சிச்சுவானின் சில பகுதிகளில் அதிக வெப்பநிலை நிலவி வ௫ம் இந்தநேரத்தில் இந்த கனமழையானது மண்சரிவு மற்றும் தீவிர இயற்கை பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று உள்ளூர் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
அது மட்டுமின்றி கடந்த ஆறு ஆண்டுகளில் சீனாவின் அதிக வெப்ப அலை, அந்நாட்டின் பொருளாதாரத்தை பெ௫மளவு பாதித்தி௫க்கிறது . இதனால் அந்நாட்டின் பொ௫ளாதார வளர்ச்சி 0.4 சதவீதமாக குறைந்துள்ளதாக ஒ௫ அறிக்கை கூறுகிறது.














