கர்நாடகாவில் கனமழை; 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை – பள்ளி, கல்லூரிகள் மூடல்

August 18, 2025

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால், மேட்டூர் அணை இந்தாண்டில் ஏற்கனவே நான்கு முறை நிரம்பியுள்ளது. சிலநாட்கள் மழை நின்ற நிலையில், கடந்த இரு நாட்களாக குடகு உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இதன் விளைவாக கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் குடகு, சிக்கமகளூரு, கோலார், தட்சிணகன்னடா, உடுப்பி, ஹாசன், சிவமொக்கா ஆகிய 7 […]

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால், மேட்டூர் அணை இந்தாண்டில் ஏற்கனவே நான்கு முறை நிரம்பியுள்ளது. சிலநாட்கள் மழை நின்ற நிலையில், கடந்த இரு நாட்களாக குடகு உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இதன் விளைவாக கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் குடகு, சிக்கமகளூரு, கோலார், தட்சிணகன்னடா, உடுப்பி, ஹாசன், சிவமொக்கா ஆகிய 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu