கேரளாவில் அக்டோபர் இரண்டாம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு 10 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் கேரளாவில் வருகின்ற இரண்டாம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசும் என தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக ஆலப்புழா,கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆலப்புழா,இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு,மலப்புறம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பருவ மழை காலம் முடிவதற்கு என்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இதனால் மலை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் தொற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியா














