மலேசியாவின் பார்னேவில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மலேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, பார்னேவில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதுவரை இந்த கடுமையான மழையால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மலேசிய வானிலை ஆய்வு மையம், கனமழை தொடரும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இருக்கின்றன.