ஆந்திராவில் மாநிலம் முழுவதும் மின்னல் தாக்கியதில் மொத்தமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தின் சித்தூர், பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று காலை முதல் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மணிக்கு 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும் வீசியது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, மா, பப்பாளி, சோளம், நெல் ஆகியவை கடுமையாக சேதமடைந்தன.
ஸ்ரீகாகுளத்தில் பைக்கில் சென்ற ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார். திருப்பதியில், மின் டிரான்ஸ்பார்மரை பழுது பார்க்க முயன்ற மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். மாநிலம் முழுவதும் மின்னல் தாக்கியதில் மொத்தமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர்.