அமெரிக்காவில், கடந்த சில நாட்களாக, கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மேலும், பனிப்புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக, அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க், பென்சில்வேனியா, நீவாடா, கொலராடா மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வீடுகள், வாகனங்கள் மற்றும் சாலைகளில் பல மீட்டர் உயரத்திற்கு, பனி படர்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள், தங்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மேலும், விமான நிலைய ஓடுதளங்கள் பனிப்பொழிவு காரணமாக முழுவதுமாக பனியால் மூடப்பட்டுள்ளன. இதனால், விமான சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. மொத்தம், 137 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.














