கொடைக்கானல் மலைப்பகுதியில் கனரக வாகனங்களுக்கு தடை!

இயற்கை அழிவை தடுக்கும் நோக்கில், கொடைக்கானல் மலைப்பகுதியில் கனரக இயந்திரங்களை இயக்கக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசின் அனுமதியின்றி, ஜேசிபி, ஹிட்டாட்சி, பாறை துளைக்கும் இயந்திரங்கள், போர் வெல் போன்ற கனரக வாகனங்கள் கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் இயற்கைச் சேதத்தை ஏற்படுத்தி வந்தன. இதைத் தடுக்க, இன்று முதல் இந்த வாகனங்களுக்கு முழுமையான தடையுண்டு. விதிகளை மீறி இயக்கப்படின், ரூ.25,000 அபராதம் அல்லது 2 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்கப்படும். அத்தியாவசிய பணிக்காகவேனும் அனுமதி […]

இயற்கை அழிவை தடுக்கும் நோக்கில், கொடைக்கானல் மலைப்பகுதியில் கனரக இயந்திரங்களை இயக்கக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அரசின் அனுமதியின்றி, ஜேசிபி, ஹிட்டாட்சி, பாறை துளைக்கும் இயந்திரங்கள், போர் வெல் போன்ற கனரக வாகனங்கள் கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் இயற்கைச் சேதத்தை ஏற்படுத்தி வந்தன. இதைத் தடுக்க, இன்று முதல் இந்த வாகனங்களுக்கு முழுமையான தடையுண்டு. விதிகளை மீறி இயக்கப்படின், ரூ.25,000 அபராதம் அல்லது 2 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்கப்படும். அத்தியாவசிய பணிக்காகவேனும் அனுமதி இல்லாமல் இயந்திரங்கள் பயன்படுத்தினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், தொடர்ந்து மீறினால் காவல் துறை வழியே கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோட்டாட்சியர் திருநாவுக்கரசு எச்சரித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu