ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், அமெரிக்காவின் பிரபல மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான ஹார்லி-டேவிட்சனுடன் இணைந்து புதிய மோட்டார் சைக்கிளை உருவாக்கவும், தற்போதுள்ள ஹார்லி-டேவிட்சன் X440 மாடலின் வரம்பை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு அறிமுகமான X440 மாடல் மிகுந்த வரவேற்பை பெற்று உலகளவில் 25,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது. இதன் விலை ₹2.39 லட்சம். மேலும், ஹீரோ நிறுவனம் Mavrick 440 என்ற புதிய மாடலை ₹1.99 லட்சத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு மாடல்களும் ஹீரோவின் பிரீமியம் வரிசையின் கீழ் விற்கப்படுகின்றன. ஹீரோ நிறுவனம் இதற்கென பிரத்யேகமாக "பிரீமியா" என்ற பெயரில் டீலர்ஷிப் நெட்வொர்க்கை உருவாக்கி வருகிறது. 2025 மார்ச் மாதம் வரை இந்த நெட்வொர்க்கில் 100 அவுட்லெட்டுகளை நிறுவ இலக்கு வைத்துள்ளது. இந்த நிலையில், ஹார்லி டேவிசன் உடனான கூட்டுறவு மற்றும் புதிய மாடல்களின் அறிமுகத்தால் ஹீரோ நிறுவனத்தின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 5.5% அதிகரித்து 5.62 மில்லியன் யூனிட்டுகளாக உள்ளது.