ஹீரோ பின்கார்ப் நிறுவனத்தின் ஐபிஓ விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஹீரோ பின்கார்ப் நிறுவனம் 4000 கோடி ரூபாய் மதிப்பில் ஐபிஓ வெளியீட்டுக்கு தயாராகிறது. இதற்கான ஒப்புதல் கிடைக்கப்பட்டுள்ளது. நேற்று, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கிளை நிதி நிறுவனமான ஹீரோ பின்கார்ப் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் சந்திப்பு நடைபெற்றது. அதன் இறுதியில், ஐபிஓ விற்கான ஒப்புதல் தரப்பட்டுள்ளது. 10 ரூபாய் பேஸ் வேல்யூ கொண்ட பொது பங்கு ஐ பி ஓ மூலம் வெளியிடப்படுகிறது. கிட்டத்தட்ட 4000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.