ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 1.5 லட்சம் ரூபாயில் இ-ஸ்கூட்டர் VIDA V1 ஐ அறிமுகப்படுத்தியது

October 8, 2022

உலகின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motorcorp) ஆனது VIDA V1 PRO மற்றும் VIDA V1 PLUS எனும் இ-ஸ்கூட்டர்களை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலைகள் முறையே ரூ.1.59 லட்சம் மற்றும் ரூ.1.45 லட்சம் ஆகும். இது குறித்து, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவன் முன்ஜால் ௯றியதாவது, VIDA V1 PRO ஆனது 165 கிமீ வரம்பைக் கொண்டுள்ளது. VIDA V1 PLUS 143 கிமீ வரம்பைக் […]

உலகின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motorcorp) ஆனது VIDA V1 PRO மற்றும் VIDA V1 PLUS எனும் இ-ஸ்கூட்டர்களை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலைகள் முறையே ரூ.1.59 லட்சம் மற்றும் ரூ.1.45 லட்சம் ஆகும்.

இது குறித்து, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவன் முன்ஜால் ௯றியதாவது, VIDA V1 PRO ஆனது 165 கிமீ வரம்பைக் கொண்டுள்ளது. VIDA V1 PLUS 143 கிமீ வரம்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த இ-ஸ்கூட்டர்களில் க்ரூஸ் கன்ட்ரோல், டூ-வே த்ரோட்டில், கீலெஸ் கன்ட்ரோல் மற்றும் அவசர காலங்களில் எஸ்ஓஎஸ் எச்சரிக்கை போன்ற பல அம்சங்கள் உள்ளதாக ௯றினார். மேலும் நிறுவனம் மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியதுடன் பயனர் அனுபவத்தை உறுதி செய்வதற்கான தளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அருகிலுள்ள சார்ஜிங் நிலையங்களைக் கண்டறிய பயணர்களுக்கு உதவும் என்று ௯றினார். இதற்கான முன்பதிவு டெல்லி, பெங்களூரு மற்றும் ஜெய்ப்பூர் முழுவதும் அக்டோபர் 10 முதல் தொடங்கும். அச்சமயம் இ-ஸ்கூட்டரை வாங்குபவர் ரூ.2,499 டோக்கன் தொகையை செலுத்தி வாகனத்தை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu