ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், எக்ஸ்ட்ரீம் 125 ஆர் என்ற புதிய இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இன்று முதல் இந்திய சந்தையில் இந்த வாகனம் விற்பனைக்கு வருகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்ட்ரீம் 125 ஆர் இருசக்கர வாகனம் 3 நிறங்களில் வெளியாகி உள்ளது. நீலம், கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய 3 நிறங்களில், பல்வேறு நவீன வசதிகளுடன் வாகனம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாகனம் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் என ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. அத்தோடு, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 66 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கும் என கூறியுள்ளது. வரும் பிப்ரவரி 20 முதல் டீலர்களிடம் எக்ஸ்ட்ரீம் 125 ஆர் வாகனம் விற்பனைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் ஆரம்ப விலை 95000 ரூபாய் என்று சொல்லப்பட்டுள்ளது.