ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வருடாந்திர விற்பனை 12% உயர்வு

December 3, 2022

உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை நவம்பர் மாதத்தில் 12% உயர்ந்துள்ளது. நவம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 390932 ஆக பதிவாகியுள்ளது. குறிப்பாக, மொத்த உள்நாட்டு விற்பனை 15.5% உயர்ந்து, 379839 ஆக பதிவாகியுள்ளது. அதே வேளையில், கடந்த வருட நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஏற்றுமதி 45.97% குறைந்து, 11093 ஆக பதிவாகியுள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகன சந்தையின் நிகர […]

உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை நவம்பர் மாதத்தில் 12% உயர்ந்துள்ளது. நவம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 390932 ஆக பதிவாகியுள்ளது. குறிப்பாக, மொத்த உள்நாட்டு விற்பனை 15.5% உயர்ந்து, 379839 ஆக பதிவாகியுள்ளது. அதே வேளையில், கடந்த வருட நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஏற்றுமதி 45.97% குறைந்து, 11093 ஆக பதிவாகியுள்ளது.

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகன சந்தையின் நிகர லாபம் 9.9% குறைந்து, 716.07 கோடியாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், வருவாய் 7.4% உயர்ந்து 9075.35 கோடியாக பதிவாகியுள்ளது. டிசம்பர் 1ம் தேதி நிலவரப்படி, நிறுவனத்தின் பங்கு மதிப்பு 0.64% உயர்ந்து, 2869.25 ரூபாயாக உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu