இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப், தனது மே மாத விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹீரோ மோட்டோகார்ப் மொத்த விற்பனை 7% உயர்ந்து, 519474 என்ற எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, உள்நாட்டு விற்பனை 508309 ஆகவும், ஏற்றுமதி வாகன விற்பனை 11165 ஆகவும் பதிவாகியுள்ளது. அதன்படி, வருடாந்திர அடிப்படையில், உள்நாட்டு விற்பனையில் ஏற்றமும், ஏற்றுமதியில் இறக்கமும் பதிவாகியுள்ளது.
இந்தியாவில், தென்மேற்கு பருவமழை வழக்கம் போல தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஹீரோ மோட்டோகார்ப் வாகன விற்பனை, இதே அளவில் அடுத்தடுத்த மாதங்களில் தொடரும் என கூறப்படுகிறது.