ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த ஜீரோ மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, பிரீமியம் வகை மின்சார மோட்டார் சைக்கிள் வாகனங்கள் தயாரிக்கப்பட உள்ளன. முன்னதாக, இதை முன்னிட்டு, 60 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ஜுரோ மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவன் முஞ்சால், ஜீரோ மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்துடனான கூட்டணி மூலம், இந்திய மின்சார வாகனச் சந்தையில் பெரும் முன்னேற்றம் பதிவு செய்யப்பட உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். ஜீரோ மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஷாம் பாஸ்சேல், வாடிக்கையாளர்களுக்கு புதுமையான வண்டி ஓட்டும் அனுபவத்தை கொடுக்க முயன்று வருவதாக கூறினார்.