இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் வீட்டை குறிவைத்த ஹிஸ்புல்லா டிரோன்கள்

October 19, 2024

லெபனானில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் குடியிருப்பு அமைந்துள்ள செசாரியா நகரில் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில், நேதன்யாகு இல்லத்திற்கு அருகிலுள்ள கட்டிடமே தாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் உயிரிழப்புகள் எதுவும் இல்லையென இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. தாக்குதலின் போது நேதன்யாகு அந்த இல்லத்தில் இருந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலும், டெல் அவிவ் நகருக்கு வடக்கே உள்ள உலா கிலோட் பகுதியில் இரண்டு டிரோன்கள் பறந்ததாகவும், அவற்றை பாதுகாப்பு படையினர் […]

லெபனானில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் குடியிருப்பு அமைந்துள்ள செசாரியா நகரில் தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதலில், நேதன்யாகு இல்லத்திற்கு அருகிலுள்ள கட்டிடமே தாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் உயிரிழப்புகள் எதுவும் இல்லையென இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. தாக்குதலின் போது நேதன்யாகு அந்த இல்லத்தில் இருந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.

மேலும், டெல் அவிவ் நகருக்கு வடக்கே உள்ள உலா கிலோட் பகுதியில் இரண்டு டிரோன்கள் பறந்ததாகவும், அவற்றை பாதுகாப்பு படையினர் அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களுக்கான விசாரணை நடந்து வருகிறது. ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலை செய்யப்பட்ட பின்னர், புதிய மற்றும் அடுத்த கட்ட போருக்குத் தாங்கள் தயாராக உள்ளதாக ஹிஸ்புல்லா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu