அதிகமான செல்போன் பயன்பாடு விந்தணு எண்ணிக்கையை குறைக்கும் - ஆய்வுத் தகவல்

November 3, 2023

கடந்த 50 ஆண்டுகளில், விந்தணு எண்ணிக்கை சர்வதேச அளவில் 50 சதவீதத்திற்கும் குறைவாகி உள்ளது. இதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதற்கு, 18 முதல் 22 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் அவர்களின் செல்போன் பயன்பாடு குறித்து ஆராய்ச்சி செய்தனர். இந்த ஆய்வின் முடிவில், “குறிப்பிட்ட வயதுடைய ஆண்கள் தங்கள் செல்போன்களை ஒரு நாளுக்கு 20 தடவைக்கும் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, விந்தணு எண்ணிக்கை குறைவதற்கான சாத்திய கூறுகள் 21% உயர்ந்துள்ளது” […]

கடந்த 50 ஆண்டுகளில், விந்தணு எண்ணிக்கை சர்வதேச அளவில் 50 சதவீதத்திற்கும் குறைவாகி உள்ளது. இதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதற்கு, 18 முதல் 22 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் அவர்களின் செல்போன் பயன்பாடு குறித்து ஆராய்ச்சி செய்தனர். இந்த ஆய்வின் முடிவில், “குறிப்பிட்ட வயதுடைய ஆண்கள் தங்கள் செல்போன்களை ஒரு நாளுக்கு 20 தடவைக்கும் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, விந்தணு எண்ணிக்கை குறைவதற்கான சாத்திய கூறுகள் 21% உயர்ந்துள்ளது” என தெரிவித்துள்ளனர்.கடந்த 13 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும், இதில் கைபேசி தொழில்நுட்ப வளர்ச்சி மிக முக்கிய பங்கு வகித்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, 2ஜி மற்றும் 3ஜி கைபேசிகளை பயன்படுத்தியதற்கும், தற்போதைய நவீன வரவான 4ஜி மற்றும் 5ஜி கைபேசிகளை பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாடுகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர். இதில், கைபேசிகள் தொடர்ச்சியாக ரேடியோ அலைகளை வெளியேற்றி வருவது விந்தணு எண்ணிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ஆண்கள் தங்கள் கைபேசிகளை குறைவாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், முடிந்தவரை கைபேசிகளை உடலில் இருந்து தூரமாக வைத்து, ஸ்பீக்கர் அல்லது ஹெட்போன்ஸ் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu