பெங்களூரு - சென்னை இடையேயான அதிவிரைவு ரயில் ரத்து

பெங்களூரு - சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரயில்வே தகவல் அளித்துள்ளது. பெங்களூர் யார்டு மற்றும் பெங்களூர் கண்ட்டோன்மென்ட்- கே.எஸ்.ஆர்.பெங்களூர் ரயில் நிலையங்கள் இடையே உள்ள பாலங்கள் மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகளின் காரணமாக சில ரயில்கள் முழுவதுமாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் சில ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. அதன்படி கே.எஸ்.ஆர் பெங்களூர் - டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சில அதிவிரைவு […]

பெங்களூரு - சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரயில்வே தகவல் அளித்துள்ளது.

பெங்களூர் யார்டு மற்றும் பெங்களூர் கண்ட்டோன்மென்ட்- கே.எஸ்.ஆர்.பெங்களூர் ரயில் நிலையங்கள் இடையே உள்ள பாலங்கள் மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகளின் காரணமாக சில ரயில்கள் முழுவதுமாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் சில ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. அதன்படி கே.எஸ்.ஆர் பெங்களூர் - டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சில அதிவிரைவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. மேலும் டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் - கே.எஸ்.ஆர் பெங்களூர் அதிவிரைவு ரயில் பகுதியாகவும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் லோக்மானிய திலக் டெர்மினல் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu