கேரளாவில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெப்பநிலை அதிகரித்து வருவதால் கேரள மாநிலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே அதிக வெயில் சுட்டெரித்து வருகிறது. இது கடந்தாண்டை ஒப்பிடுகையில் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கண்ணூர் மாவட்டத்தில் 37.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதே போன்று கோழிக்கோடு,எர்ணாகுளம், திருச்சூர், கோட்டயம் ஆகிய மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் இது அதிகரிக்கும் என்பதால் கண்ணூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் சூரிய ஒளி மற்றும் நீரிழிப்பு ஆகியவற்றை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பள்ளி குழந்தைகள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வாட்டர் பெல் என்ற முறை இன்று முதல் அமலாகியுள்ளது.














