கர்நாடக முதலமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை, பள்ளி கல்லூரியில் ஹிஜாப் அணிய தடை விதித்து இருந்தார்.
சமீபத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் கர்நாடகாவில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்படுவதாக முதல் மந்திரி சித்தராமையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து சித்தராமையா கூறுகையில் உடை அணிவது, என்ன உணவு சாப்பிடுவது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் அதை ஏன் தடுக்க வேண்டும். விருப்பத்திற்கு விருப்பத்திற்கு ஏற்ப எந்த உடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.