ஹிந்தால்கோ நிறுவனம் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தனிப்பட்ட முறையில், ஹிந்தால்கோ இண்டஸ்ட்ரீஸ் 48% லாப இழப்பை பதிவு செய்துள்ளது. மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 832 கோடியாக உள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் 1601 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், நிறுவனத்தின் இயக்க வருவாய் 5% உயர்ந்து, 19995 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹிந்தால்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வரிக்குப் பின்னான லாபம் 37% சரிந்து, 2411 கோடி ஆகவும், வருவாய் 5% உயர்ந்து, 55857 கோடி ஆகவும் சொல்லப்பட்டுள்ளது. துறைவாரியாக, அலுமினிய வர்த்தகம் 8050 கோடி அளவில் வருவாய் ஈட்டியுள்ளது. அதே வேளையில், காப்பர் வர்த்தகத்தில் 1126 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. எனவே, நிறுவனத்தின் பொது பங்கு ஒன்றுக்கு, 3 ரூபாய் டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.