ஆதித்ய பிர்லா குழுமத்தை சேர்ந்த ஹிண்டால்கோ நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபத்தில் 71% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், ஹிண்டால்கோ நிறுவனத்தின் நிகர லாபம் 71.1% உயர்ந்து 2331 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக, அலுமினியம் மற்றும் காப்பர் வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைத்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 52808 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் எபிட்டா மதிப்பு 61% உயர்ந்து 6322 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து அதன் நிர்வாக இயக்குனர் சதீஷ் பாய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தொடர்ந்து, நிறுவனம் முன்னேற்ற பாதையில் பயணிக்கும் என உறுதி அளித்துள்ளார்.