ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை ஹிந்துஜா குழுமம் கையகப்படுத்த உள்ளது. இதற்கு தேவைப்படும் 4000 கோடி ரூபாய் நிதியை கடனாக பெற திட்டமிட்டுள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனமான 360 ஒன் ப்ரைம் நிறுவனத்துடன் ஹிந்துஜா குழுமம் இது தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது
தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, 360 ஒன் ப்ரைம் நிறுவனம் 14 முதல் 15% வட்டி விகிதத்தில் 4000 கோடி ரூபாய் நிதியை வழங்க உள்ளது. அதே சமயத்தில், ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தில் ஹிந்துஜா குழுமத்தின் பங்குகள் 15% ல் இருந்து 26% ஆக உயர்கின்றன.