ஹாக்கி இந்தியா சி.இ.ஓ எலினா நாரிமன் ராஜினாமா

13 ஆண்டுகளாக ஹாக்கி இந்தியா நிர்வாகத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த எலினா நாரிமன் ராஜினாமா செய்துள்ளார். ஹாக்கி இந்தியா அமைப்பில் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக எலினா நாரிமன் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் உள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த எலினா நாரிமன் விளையாட்டு நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக 2007ல் இந்தியா வந்தடைந்தார். பின்னர் 2011ல் ஹாக்கி இந்தியா கூட்டமைப்பின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவருக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனும் […]

13 ஆண்டுகளாக ஹாக்கி இந்தியா நிர்வாகத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த எலினா நாரிமன் ராஜினாமா செய்துள்ளார்.

ஹாக்கி இந்தியா அமைப்பில் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக எலினா நாரிமன் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் உள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த எலினா நாரிமன் விளையாட்டு நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக 2007ல் இந்தியா வந்தடைந்தார். பின்னர் 2011ல் ஹாக்கி இந்தியா கூட்டமைப்பின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவருக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனும் காரணம் கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார். சம்பளம் நிறுத்திவைப்பு மற்றும் நிர்வாகத்தில் ஏற்பட்ட பிளவு காரணங்களால் தனது பணி மிகவும் கடினமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான்னக் ஸ்கோப்மேன் பதவி விலகினார். இது ஹாக்கி இந்தியா அமைப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது .

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu