ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி

ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மணிப்பூர் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு நடத்தும் 14-வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி தற்போது சென்னை எழும்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப், உத்தரபிரதேசம், ஒடிசா, மராட்டியம், அரியானா மற்றும் மணிப்பூர் ஆகிய 8 அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று பஞ்சாப் மற்றும் மணிப்பூர் அணிகள் மோதின, இந்த ஆட்டம் […]

ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மணிப்பூர் அரை இறுதிக்கு தகுதி
பெற்றுள்ளது.

தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு நடத்தும் 14-வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி தற்போது சென்னை எழும்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப், உத்தரபிரதேசம், ஒடிசா, மராட்டியம், அரியானா மற்றும் மணிப்பூர் ஆகிய 8 அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று பஞ்சாப் மற்றும் மணிப்பூர் அணிகள் மோதின, இந்த ஆட்டம் 3-3 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. பின்னர் பெனால்டி ஷூட் அவுட் மூலம் மணிப்பூர் அணி 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இன்று மற்ற கால் இறுதி ஆட்டங்கள் அரியானா-மராட்டியம், தமிழ்நாடு-உத்தரபிரதேசம், கர்நாடகா-ஒடிசா அணிகள் மோதுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu