ஐவர் மகளிர் ஹாக்கி உலககோப்பை போட்டி ஓமனில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மகளிர் அணி அரையிறுதி சுற்றிற்கு முன்னேறி உள்ளது.
ஓமனில் நடைபெற்று வரும் முதலாவது ஐவர் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி சி பிரிவில் இடம் பெற்றிருந்தது. இதில் இந்தியாவுடன் அமெரிக்கா, போலந்து, நமீபியா ஆகிய அணிகள் இடம் பெற்று இருந்தன. இதன் லீக் சுற்றில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் ஆரம்பம் முதலில் இந்திய அணி தனது அபாரமான விளையாட்டை வெளிப்படுத்தியது. அதனை தொடர்ந்து போட்டியின் முடிவில் இந்திய அணி 11-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி அரையிறுதி சுற்றில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள உள்ளது.