கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக அண்ணாமலை பல்கலைக்கழகம் இன்று விடுமுறை அறிவிக்கின்றது
கடலூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையின் காரணமாக, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நடைபெற உள்ள தேர்வுகள் ஒத்திவைக்கப்படும். புதிய தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பதிவாளர் (பொறுப்பு) மு. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.














