கடந்த 2023 ஆம் ஆண்டில், இந்தியாவின் முக்கிய 7 நகரங்களில் வீடுகள் விற்பனை வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 31% உயர்ந்துள்ளது. பிரபல சந்தை ஆலோசனை நிறுவனமான அனாரோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பான விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த அறிக்கையின் படி, மும்பை நகரத்தில் அதிக வீடுகள் விற்கப்பட்டுள்ளன. மும்பையில் 40% , புனேயில் 52% , டெல்லி என் சி ஆரில் 3% , பெங்களூருவில் 29% , ஹைதராபாத்தில் 30% , சென்னையில் 34% , கொல்கத்தாவில் 9% என்ற அளவில் வீடுகள் விற்பனை உயர்ந்துள்ளது. மொத்தத்தில், இந்த 7 நகரங்களில், 476530 எண்ணிக்கையில் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது வரலாற்று உச்சம் ஆகும். வீடுகளின் விலைகள் உயர்ந்தது மற்றும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்ந்தது போன்றவற்றுக்கு இடையிலும், வீடுகள் விற்பனை உச்சம் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.