உடல் பராமரிப்பு பொருட்களை விற்பனை செய்து வரும் மாமாஎர்த் நிறுவனம், அதிகமான காலாண்டு லாபத்தை பதிவு செய்துள்ளது. இதன் எதிரொலியாக, மாமாஎர்த் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஹோனாசா கன்ஸ்யூமர் நிறுவன பங்குகள் இன்று 20% வரை உயர்ந்து வர்த்தகம் ஆகின.ஹோனாசா நிறுவனத்தின் கடந்த காலாண்டு லாபம் இரட்டிப்பாக உயர்ந்து, 294.4 மில்லியன் ரூபாய் அளவில் பதிவாகியுள்ளது. குறிப்பாக, நிறுவனத்தின் மைய லாபத்தில் 8.1% மற்றும் விற்பனை லாபத்தில் 21% உயர்வு பதிவாகியுள்ளது. முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் ஹோனாசா கன்ஸ்யூமர் ஐ பி ஓ அதிக வரவேற்பை பெற்றது. நிறுவனத்தின் பங்குகள் அதிகமாக வாங்கப்பட்டன. இந்த நிலையில், இன்று காலை வர்த்தகத்தில், ஹோனாசா பங்குகள் அப்பர் சர்க்யூட் விலையான 423.75 ரூபாய்க்கு வர்த்தகமானது.