ஹோண்டா நிறுவனத்தின் புதிய எஸ்யூவி ரக வாகனம் ஹோண்டா எலிவேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் ஜூலை மாதமும், இந்தியாவில் வரும் பண்டிகை காலத்திலும் இந்த வாகனம் வெளியாக உள்ளது. இந்த வாகனத்தில் எல்இடி ஹெட்லைட் உள்ளிட்ட பல்வேறு வெளித்தோற்ற மேம்படுத்தல்கள் உள்ளன.
ஹோண்டா எலிவேட் வாகனம், ஹோண்டா சிட்டி வாகனத்தின் நீட்சியாக கருதப்படுகிறது. ஹோண்டா சிட்டி போலவே, இதிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 10.25 இன்ச் தொடுதிரையுடன் கூடிய ஸ்மார்ட்போன் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், சன் ரூஃப், சிறந்த பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை உள்ளன. எனவே, இந்த வாகனம் ஹூண்டாய் கிரீட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா, டொயோட்டா ஹைட்ரா உள்ளிட்ட வாகனங்களுக்கு போட்டியாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த வாகனம் இந்தியாவில் 10 லட்சம் முதல் 17 லட்சம் வரை விற்கப்படும் என கூறப்படுகிறது.














