ஹோண்டா நிறுவனம், ஹோண்டா சிட்டி மற்றும் ஹோண்டா அமேஸ் கார்களின் விலைகளை செப்டம்பர் மாதம் முதல் உயர்த்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கார் உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, இந்த விலை உயர்வு கொண்டு வரப்படுவதாக ஹோண்டா கார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்திய பிரிவு துணைவேந்தர் குணால் பெல் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், ஹோண்டா அமேஸ் கார்கள் 7.05 லட்சம் தொடங்கி விற்பனையாகின்றன. அதே வேளையில், ஹோண்டா சிட்டி கார்கள் 11.57 லட்சம் ரூபாயில் தொடங்கி விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், இந்த வகை மின்சார கார்கள் 18.89 ரூபாய் முதல் விற்கப்படுகின்றன. இந்த நிலையில், கார் விலைகளில் எத்தனை சதவீதம் உயர்வு இருக்கும் என்பது குறித்து ஹோண்டா நிறுவனம் விவாதித்து வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.